/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தட்பவெப்ப நிலையில் மாற்றம் மல்லிகை விவசாயிகள் கவலை
/
தட்பவெப்ப நிலையில் மாற்றம் மல்லிகை விவசாயிகள் கவலை
தட்பவெப்ப நிலையில் மாற்றம் மல்லிகை விவசாயிகள் கவலை
தட்பவெப்ப நிலையில் மாற்றம் மல்லிகை விவசாயிகள் கவலை
ADDED : பிப் 22, 2025 05:49 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் மல்லிகை பூ விளைச்சல் குறைந்துவிட்டது. வருமானமின்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வேடர்புளியங்குளம், சாக்கிபட்டி, தென்பழஞ்சி, நிலையூர், சூரக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தட்பவெப்பநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: காலை, மதியம், மாலையில் பூக்கள் பூக்கும். ஏக்கருக்கு 30 முதல் 200 கிலோ வரை கிடைக்கும். கார்த்திகை, மார்கழி, தை மாதம் வரை பனியால் விளைச்சல் குறையும்.
கொரோனாவிற்கு பின்பு பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாசி மாதம் 10 நாட்களாகியும் இரவில் அதிக பனிப்பொழிவும், பகலில் அதிக வெயிலும் இருப்பதால் விளைச்சல் குறைந்து விட்டது. பல நிலங்களில் விளைச்சல் முற்றிலும் தடைப்பட்டு விட்டது. பலரது தோட்டங்களில் மல்லிகை செடிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூக்கள் விளையும் நிலங்களில் ஏக்கருக்கு அரை கிலோ கிடைப்பதே சிரமமாக உள்ளது. 3 மாதங்களாக வருமானமின்றி தவிக்கிறோம். எக்காலத்திலும் விளையும் வகையிலான தொழில் நுட்பங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.

