ADDED : ஜூலை 22, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கோட்ட நத்தாம் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலுார் அளவிலான குறுவட்ட கபடி போட்டி சுந்தரராச மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தது.
இருநாட்கள் நடந்த போட்டியை தலைமை ஆசிரியர் மங்களநாயகி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பிரமணி, விளையாட்டு ஆசிரியர் கண்ணன் நடத்தினர். 14 வயது மாணவர்களுக்கான போட்டியில் திருவாதவூர், மேலுார் நகராட்சி பள்ளிகளும், 17 வயது மாணவிகளுக்கான போட்டியில் உறங்கான்பட்டி, தனியாமங்கலம் பள்ளிகளும், 17 வயது மாணவர்களுக்கான போட்டியில் சேக்கிபட்டி, சருகுவலையபட்டி பள்ளிகளும், 19 வயது மாணவர்களுக்கான போட்டியில் சருகு வலையபட்டி, உறங்கான்பட்டி பள்ளி மாணவர்கள் முதல் இரண்டு பரிசுகளை வென்றனர்.
