ADDED : ஜூன் 07, 2024 06:28 AM
மதுரை: இடையப்பட்டி வெள்ளியாண்டவர் கோயில் காட்டில் தமிழ்ப்பயில் குழு சார்பில் நறுங்கடம்பு என்னும் தலைப்பில் தமிழ் இலக்கியங்களில் கடம்ப மரம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.
நறுங்கடம்பு புத்தக ஆசிரியர் கார்த்திகேயன் கூறியதாவது: தமிழ் இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ்ப் பயில் குழு மூலம் மாதம் ஒரு முறை நெடுநல்வாடை, தன்பரங்குன்றம், வதுவை என்னும் தலைப்புகளில் கலந்துரையாடல் நடந்தது. உண்மையான கடம்பவனமான இடையப்பட்டி வெள்ளியாண்டவர் கோயில் காட்டில் கடம்ப மரங்கள் நிறைய உள்ளன. பரவலாகப் பூத்திருந்தது. இந்த காட்டில் வைத்து இலக்கியத்தில் கடம்ப மரம் குறித்து விளக்கப்பட்டது என்றார்.
கடம்ப மரம் குறித்து, பேராசிரியர் நாகரத்தினம், டாக்டர் பத்ரி நாரயணன், ஆசிரியர் ஹரிபாபு, மதுரை இயற்கை பண்பாட்டு சூழல் பேரவை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன், இயற்கை ஆர்வலர் அழகப்பன் பங்கேற்றனர். சிறுவர்களுக்கான 'மரங்களின் கதை - கடம்பு' புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டது.