ADDED : ஆக 13, 2024 06:14 AM

வாடிப்பட்டி : போடிநாயக்கன்பட்டி ஆதி சந்தனக்கோனார் பங்காளிகள் சார்பில் பொன் அழகாயி அம்மன் கோயில் களரி எடுப்பு விழா நடந்தது.
ஜூலை 26ல் கோயில் வீட்டில் இருந்து பங்காளிகள் அழகர்கோவில் சென்று தீர்த்தம் ஆடி கோயில் வந்தனர். அன்று மாலை தனிச்சியம்அய்யனார் கோயில் சென்று சுவாமி குதிரைகள்செய்ய பிடிமண் வழங்கபட்டது. ஆக 9ல் கோயில் வீட்டில் உள்ள பெட்டிகளை பூஜாரி வகையறாக்கள் இரும்பாடிக்கு எடுத்து சென்று அம்மன கரகம் ஜோடித்து கோயில் அழைத்து வந்தனர்.
ஆக.10ல் கோயிலில் இருந்து பொங்கல் பானை கிடாக்களுடன் தனிச்சியம் சாஸ்தா அய்யனார் கோயில் சென்றனர். நேற்றுமுன்தினம் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கிடா வெட்டி அன்னதானம் வழங்கினர். மாலையில் அய்யனார் கோயிலில் இருந்து சின்ன அய்யன் குதிரை 2 எடுத்து தாதம்பட்டி கிராமம் வந்தனர்.
ஏற்பாடுகளை போடிநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, தணிச்சியம், அய்யங்கோட்டை, அய்யம்பாளையம், தாதகவுண்டன்பட்டி, அழகாயி கோயில் பங்காளிகள் செய்தனர்.