ADDED : ஆக 05, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி மழவராயர் பங்காளிகள் சார்பில் கருப்புசாமி, மதுரை வீரன் சுவாமி கோயிலில் களரி எடுப்பு உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது.
முதல் நாள் கோயிலில் இருந்து பெட்டி எடுத்து வாடிப்பட்டி இந்து நாடார் உறவின் முறையினருக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்திற்கு சென்றனர். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு ஆச்சி அம்மனுக்கு கரகம் ஜோடித்து, பரிவார தெய்வங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். சுவாமிகளுக்கு காவு கொடுக்கும் நிகழ்வு நடந்தது. 2ம் நாள் காலை அனைத்து சுவாமிகளும் அருள்வாக்கு கூறுதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது.
அனைத்து சுவாமிகளும் மழவராயர் பங்காளிகள் மற்றும் சோழகர் மாமன், மைத்துனர் வீடுகளுக்கு சென்று அருள்பாலித்து மஞ்சள் நீராட்டுதல் நடந்தது.