ADDED : மே 17, 2024 06:14 AM

மதுரை: தேசிய சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளி சார்பில் விளாங்குடி ஸ்ரீ ராம் மெட்ரிக் பள்ளியில் கராத்தே மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம், கருப்பு பட்டை தேர்வு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர். கராத்தே பள்ளி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், கார்த்திகேயன், அங்குவேல், பாலகாமராஜன், அக் ஷயா பங்கேற்றனர்.
மறைந்த கராத்தே பயிற்சியாளர் அஜித் பிரகாஷிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.
மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க செயலாளர் கருணாகரன் தேர்வான மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
ஸ்ரீராம் பள்ளித்தாளாளர் பாண்டியன், கரூர் வைசியா வங்கி கிளை மேலாளர் இளங்குமரன், பெர்பெக்ட் இன்ஜினியரிங் நிறுவனர் பாஸ்கரன், ஆர்.கே. இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் விக்னேஷ் கலந்து கொண்டனர்.
