/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்ச் 2ல் கன்னியாகுமரியில் 'கர்ம யோகினி சங்கமம்'
/
மார்ச் 2ல் கன்னியாகுமரியில் 'கர்ம யோகினி சங்கமம்'
ADDED : பிப் 26, 2025 07:39 PM
மதுரை:தியாக பெண்களின் பெருமையை போற்றும் வகையில் மார்ச் 2ல் கன்னியாகுமரியில் 'கர்மயோகினி சங்கமம்' என்ற பெண்கள் பங்கேற்கும் மாநாடு நடக்க உள்ளது.
சேவா பாரதி அமைப்பின் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்து சக் ஷம் சேவை அமைப்பின் தேசிய துணைத் தலைவர் காமாட்சி, மதுரை தலைவர் வடிவேல்முருகன், விழா கமிட்டி தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் கூறியதாவது:
பாரத தேசத்திற்காக தியாகம் செய்த பெண்மணிகள் ராணி அகல்யாபாய் ஹோல்கர், வேலுநாச்சியார், சமூகத்தை கட்டிக்காத்த அன்னை சாரதா, அவ்வையார், மாதா அமிர்தானந்தமயி, திலகவதி அம்மையார், வாழ்க்கையை அர்ப்பணித்த வெட்டுகாளியம்மன், வீரமங்கை குயிலி, ஆன்மிக அர்ப்பணிப்பில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார், தியாகிகளுக்கு உறுதுணையாக இருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், வ.உ.சிதம்பரனாரின் மனைவி மீனாட்சி அம்மாள் போன்றோரும் தியாகம் செய்துள்ளனர்.
இப்பெண்களின் பெருமையை போற்றுவது, வருங்கால தலைமுறையினர் இவர்களைப் பின்பற்றுவது, பெண்கள் மேம்பாடு போன்றவற்றுக்காக கன்னியாகுமரியில் மார்ச் 2ல் 'கர்மயோகினி சங்கமம்' மாநாடு நடக்க உள்ளது. 'தாய்மைக்கு நிகரான தவம் எதுவுமில்லை' என்ற கருப்பொருளில் இது நடக்கும்.
இதில் தென்மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பர். இதில் பாரத துறவியருக்கு மரியாதை, பூஜைகள் செய்யப்பட உள்ளன.
மாதா அமிர்தானந்தமயி, ஆர்.எஸ்.எஸ்.,சின் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, அக்னி 4 திட்ட இயக்குனர் டெஸ்ஸி தாமஸ், எம்.ஜி.ஆர்., பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதாசேஷய்யன் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.