ADDED : ஏப் 17, 2024 05:42 AM

அ நிறம் | அளவு
மதுரை,: மதுரை குயின் மீரா பள்ளியில் மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பாயின்ட் பைட், லைட் கான்டாக்ட், லோ கிக், கிக் லைட், மியூசிக்கல் பார்ம் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமி, வலிமை ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் 18 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கல பதக்கம் வென்றனர்.
அவர்களை மாவட்ட கிக் பாக்சிங் சங்கத் தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ்குமார், தலைமை பயிற்சியாளர் கார்த்திக் பாராட்டினர். தங்கம் வென்ற மாணவர்கள் சென்னையில் நடக்கவுள்ள மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
