/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையம் மேம்பாலம் மேல்தளம் அமைக்கும் பணி துவக்கம்
/
கோரிப்பாளையம் மேம்பாலம் மேல்தளம் அமைக்கும் பணி துவக்கம்
கோரிப்பாளையம் மேம்பாலம் மேல்தளம் அமைக்கும் பணி துவக்கம்
கோரிப்பாளையம் மேம்பாலம் மேல்தளம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 04:44 AM

மதுரை: மதுரை நகரில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடக்கும் ரோடு, பாலப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை ரூ.190 கோடி செலவில் மேம்பாலம் அமைய உள்ளது. பாலத்தின் கீழ் சர்வீஸ் ரோடு அமைக்க கூடுதல் இடம் தேவைப்படுவதால் கோரிப்பாளையம், நெல்பேட்டை பகுதியில் கடைகள், வீடுகளை கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பாலத்தில் செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதிக்கு ஒரு பிரிவு செல்கிறது. இதற்கு துாண்கள் அமைத்து அதில் மேல்தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி இயக்குனர் சுகுமார், உதவிப் பொறியாளர் வெங்கடேஷ் பாபு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அரசரடிசந்திப்பில் ரூ.5 கோடியில் ரவுண்டானா அமையஉள்ளது. இப்பகுதியில் ரோட்டோரம் மழைநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கிஉள்ளது. இங்கு விரைவில் ரோட்டை அகலப்படுத்தி சிக்னல் இல்லாத ரவுண்டானா அமையும்.
அடுத்து வைகை வடகரையில் காமராஜர் பாலம் முதல் சமயநல்லுார் வரை தற்போதுள்ள திண்டுக்கல் ரோட்டுக்கு இணையாக, நதிக்கரையோரம்8 கி.மீ., க்கு புதிய ரோடு அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டனர்.
கூடல்நகர் பாலம் துவங்கி பாலமேடு வரை 4 வழிச்சாலை அமைப்பது, அதில் நீர்வழிப்பாதை அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

