ADDED : செப் 02, 2024 06:17 AM

மேலுார் : மேலுாரில் யாதவ சமுதாயத்தினர் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவையொட்டி ஆக.25 ல் பக்தர்கள் அழகர்கோவிலில் தீர்த்தமாடினர். பிறகு மேலுாரில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றி காப்பு கட்டி விரதமிருந்தனர்.
ஆக.31 கோமாதா பூஜை, கோயில் முன்பு மதுரை மீனாட்சி கலையகம் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவில் விளக்கு பூஜை நடந்தது.
நேற்று காலை பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பிறகு உறியடி திருவிழா, அன்னதானம் நடந்தது.
முன்னதாக சுவாமி ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.