/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கேரம் போட்டியில் கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர்கள் வெற்றி
/
கேரம் போட்டியில் கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர்கள் வெற்றி
கேரம் போட்டியில் கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர்கள் வெற்றி
கேரம் போட்டியில் கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : ஆக 28, 2024 06:18 AM

மதுரை : மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டி என்.ஆர்.எம்., ட்ரீம் சர்வதேச பள்ளியில் நடந்தது. இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ. (கே.ஆர்.எஸ்.,) பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பரிசுகளை வென்றனர்.
12 வயதுக்குட்பட்டோர் மகளிர் இரட்டையர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவி அகிலா, ஆறாம் வகுப்பு ஜோவிதா இரண்டாம் பரிசு வென்றனர். ஒற்றையர் பிரிவில் ஜோவிதா இரண்டாம் பரிசு வென்றார். 14 வயது ஒற்றையர் பிரிவில் எட்டாம் வகுப்பு வர்ணிகா சின்மயி முதல் பரிசு வென்றார்.
17 வயது இரட்டையர் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு அபர்ணா, பிளஸ் 1 மாணவி அபிநயா இரண்டாம் பரிசு வென்றனர்.
ஒற்றையர் பிரிவில் அபர்ணா முதல் பரிசு வென்றார்.
19 வயது இரட்டையர் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு ஹஷிதா, பத்தாம் வகுப்பு அபிநயா முதல் பரிசு வென்றனர். ஒற்றையர் பிரிவில் அபிநயா முதல் பரிசு வென்றார்.
ஆடவர் பிரிவு போட்டி:
12 வயது இரட்டையர் பிரிவில் ஐந்தாம் வகுப்பு தரணிதரன், அஜய் மூன்றாம் பரிசு வென்றனர். 14 வயது இரட்டையர் பிரிவில் எட்டாம் வகுப்பு சாய்பிரசாத், ஏழாம் வகுப்பு ஸ்ரீ சரண் மூன்றாம் பரிசு வென்றனர். ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ சரண் இரண்டாம் பரிசு வென்றார். 17 வயது இரட்டையர் பிரிவில் பிளஸ் 1 மாணவர் கார்த்திகேயன், பத்தாம் வகுப்பு ஹரிஷ் மூன்றாம் பரிசு வென்றனர். ஒற்றையர் பிரிவில் கார்த்திகேயன் இரண்டாம் பரிசு வென்றார். 19 வயது இரட்டையர் பிரிவில் பிளஸ் 1 மாணவர்கள் விக்னேஸ்வரன், வீர பாலமுருகன், ஒற்றையர் பிரிவில் வீர பாலமுருகன் முதல் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை முதல்வர் சூர்யபிரபா, உடற்கல்வி ஆசிரியர் சக்தி பிரகாஷ் பாராட்டினர்.