/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கத்தரியில் புழு தாக்குதலால் குன்றத்து விவசாயிகள் கவலை
/
கத்தரியில் புழு தாக்குதலால் குன்றத்து விவசாயிகள் கவலை
கத்தரியில் புழு தாக்குதலால் குன்றத்து விவசாயிகள் கவலை
கத்தரியில் புழு தாக்குதலால் குன்றத்து விவசாயிகள் கவலை
ADDED : மார் 07, 2025 04:56 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, சாக்கிலிப்பட்டி, கீழக்குயில்குடி உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கத்தரி பயிரிட்டுள்ளனர். காய்கள் விளைந்த நிலையில் புழுக்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் விவசாயிகள் நஷ்டமடைகின்றனர்.
விவசாயிகள் சிவராமன், பாண்டி கூறியதாவது: கத்தரி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகியுள்ளது. காய்கள் அறுவடையின்போது புழுக்களின் தாக்கம் அதிகமாகி பெருமளவு காய்கள் வீணாகிறது. சாதாரணமாக ஏக்கருக்கு பறிப்புக்கு 500 கிலோ கிடைக்கும். புழு தாக்கத்தால் 100 கிலோ கிடைப்பதே அரிதாக உள்ளது. மேலும் காய்களை வியாபாரிகள் கிலோ ரூ. 8 க்கு கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் விலையும் இன்றி, புழுக்கள் தாக்கமும் அதிகம் உள்ளதால் நஷ்டமடைகிறோம். எவ்வளவு மருந்து தெளித்தாலும் புழுக்கள் கட்டுப்படவில்லை. புழுக்கள் தாக்கிய காய்களை மாடுகளுக்கு உணவாக்குவதுடன், குப்பையிலும் கொட்டுகிறோம். பறிப்பு கூலி கூட கிடைக்காமல் சிரமப்படுகிறோம். ஏற்கனவே தக்காளி, மிளகாய் பயிரிட்டவர்கள் விலை இன்றி அவதிப்படுகின்றனர். .
நெல், கரும்புக்கு அரசு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்துள்ளது போல் காய்கறிகளுக்கும் நிரந்தர விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே காய்கறி விவசாயிகள் மேம்பட முடியும். இல்லையெனில் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை உருவாகும் என்றனர்.