நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே வைரவநத்தத்தில் ஹிந்து முன்னணியின் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் விளக்கு பூஜை நடந்தது.
ஒன்றிய தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சூரிய பிரகாஷ், ஒன்றிய தலைவர் கணேசன் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

