ADDED : ஆக 08, 2024 05:10 AM

மேலுார்: மேலுாரில் வழக்கறிஞர் விஜயபாரதியை ஆக. 3ல் முன்விரோதம் காரணமாக பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமனாதன் தலைமையில் 10 பேர் தாக்கினர். இச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பார் கவுன்சில் இணைத் தலைவர் அசோக், மேலுார் வழக்கறிஞர் சங்க செயலாளர் சுரேந்தர் தலைமையில் ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட இருவர் உட்பட அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞரின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., வேல்முருகன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்தனர். மேலுார் -மதுரை ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.