ADDED : ஜூன் 04, 2026 11:51 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம் என்ற பயிற்சி நாளை முதல் 2 நாட்கள் (ஜூன் 6,7) நடக்கிறது.
பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்தை சுற்றி பார்த்து இயந்திரங்களின் செயல்பாடு, எந்த கருவியை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் போன்ற அடிப்படை பயிற்சிகள், மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள் குறித்து நேரடி செயல் விளக்கங்கள் பெறலாம். மாணவர்கள், பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிலைய அலுவலர் குமார் தெரிவித்தார்.
