ADDED : பிப் 24, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்தது.
தலைமை ஆசிரியர் நாராயணன் துவக்கி வைத்தார். துணை கல்விஇயக்குனர் அம்சத்இப்ராஹிம் தொழுநோயால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார். மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம், தொழுநோய் அலுவலக பணியாளர்கள் ஜெய்சங்கர், ஜெயராமன் உடனிருந்தனர்.
உதவி தலைமை ஆசிரியர் அகிலாண்டேஸ்வரன், உடற்கல்வி ஆசிரியர் ரவி, ஜோதிபாசு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.

