/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரும்பாடி 'பாரில்' மது விற்பனை 'ஜோர்'
/
இரும்பாடி 'பாரில்' மது விற்பனை 'ஜோர்'
ADDED : மே 31, 2024 05:29 AM
சோழவந்தான் : சோழவந்தான் அருகே இரும்பாடியில் உள்ள டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெரிசல், குற்றச் சம்பவங்கள் அதிகரித்ததால் பொது மக்கள் கடைக்கு எதிராக போராடினர். இதனைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள், ஆளும் தரப்பினருக்குஆதரவாக மதுக்கடை அருகே பார் அமைக்க அனுமதி வழங்கினர்.
டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம், பாட்டில்கள் திருட்டு, பெண்களிடம் வழிப்பறி, டூவீலர் திருட்டு, அரசு பஸ் கண்ணாடி உடைப்பு என குற்றச் சம்பவங்கள் தொடர்கிறது. சிலமாதங்களாக பாரில் இரவு 9:55 மணி முதல் மறுநாள் மதியம் 12:00 மணிவரை மது விற்பனை களை கட்டுகிறது. தொழிலாளர்கள், இளைஞர்கள்அதிகாலையிலேயே டூவீலர்களை ரோட்டோரம் பார்க் செய்துவிட்டு 'பார்' செல்கின்றனர்.
வாட்டர் பாட்டில், கப், பணியாரம், ஊறுகாய் 'சைடு டிஷ்'களுடன் மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. ஆளும் தரப்பு தலையீடு உள்ளதால் இந்த சட்டவிரோத மது விற்பனையை போலீசார் கண்டு கொள்ளவில்லை. மதுக்கடையை அகற்ற கிராம பெண்கள் வலியுறுத்துகின்றனர்.