/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருந்துகள் கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் அவதி
/
மருந்துகள் கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் அவதி
ADDED : செப் 18, 2024 04:15 AM
பேரையூர், : கால்நடை மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்டவை இல்லாததால், கால்நடை வளர்ப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேரையூர் தாலுகாவில் 6 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. இவற்றிற்கு அந்தந்த தரத்திற்கு ஏற்ப ஆண்டிற்கு 4 முறை மருந்துகள் சப்ளை செய்யப்படும். ஆனால் 6 மாதங்களுக்கும் மேலாக மருந்து சப்ளை செய்யவில்லை. இதனால் மருந்துகள், சிரப்புகள், தடுப்பூசிகள், குளுகோஸ் உள்ளிட்ட கால்நடைகளின் நோய் தீர்க்கும் மருந்துகள் கையிருப்பு இல்லை.
இதனால் கால்நடை வளர்ப்போர் குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெளி மார்க்கெட்டில் கால்நடை மருந்து கடைகளில் சென்று வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.
இதனால் கால்நடைகளின் நோயை குணமாக்க வழி தெரியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். கால்நடைத் துறை இணை இயக்குநர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி தேவையான மருந்து சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.