தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எல்.எல்.ஆர்., காலதாமதம்

எல்.எல்.ஆர்., காலதாமதம்

எல்.எல்.ஆர்., காலதாமதம்


ADDED : ஜூன் 20, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: வாகனம் ஓட்டி பழக எல்.எல்.ஆர்., (கற்றல் உரிமப்பதிவு) எடுப்பது காலதாமதம் ஆவதால் வாகன ஓட்டும் பழகுனர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெறும் முன்பு வாகனத்தை கற்றுக்கொள்ள வழங்கப்படும் தற்கால உரிமம் எல்.எல்.ஆர்., ஆகும். இந்த உரிமத்தை பெற்று 30 நாட்களுக்குப் பிறகு நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உரிமம் 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும். எல்.எல்.ஆர்., உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி ஆன்லைனில் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றால் சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் வெற்றி பெற்றுள்ள பலர் எல்.எல்.ஆர்., சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முடியாமல் ஒருவாரமாக வட்டார போக்குவரத்து அலுவலர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us