/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வேளாண் பொருள் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்யணும் மதுரை 'அக்ரி' தொழில் சங்கம் வலியுறுத்தல்
/
வேளாண் பொருள் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்யணும் மதுரை 'அக்ரி' தொழில் சங்கம் வலியுறுத்தல்
வேளாண் பொருள் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்யணும் மதுரை 'அக்ரி' தொழில் சங்கம் வலியுறுத்தல்
வேளாண் பொருள் சந்தைக் கட்டணத்தை ரத்து செய்யணும் மதுரை 'அக்ரி' தொழில் சங்கம் வலியுறுத்தல்
ADDED : மார் 11, 2025 05:20 AM
மதுரை: 'அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கான சந்தை கட்டணத்தை ரத்து செய்து வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலினுக்கு வேளாண் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1987 தமிழ்நாடு வேளாண் விளை பொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தில் பட்டியல் இடப்பட்டுள்ள நெல், சிறுதானியங்கள், கொண்டைகடலை, உளுந்து, நிலக்கடலை, எண்ணெய் வித்துகள், புளி, மிளகாய் வத்தல், தேங்காய் உள்ளிட்ட 40 விளை பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களுக்கும் சந்தை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் சங்கதலைவர் ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் 27 மார்கெட்டிங் கமிட்டிகளும் அவற்றின் கீழ் 284 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் செயல்படுகின்றன. அறிவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களின் போக்குவரத்துக்கே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சந்தை கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்றுதான் சரக்குடன் எடுத்துச்செல்ல வேண்டும். இரவில் அதிகாரிகள் இல்லாமல் அனுமதி பெற முடியாத நிலையில் அமலாக்க அதிகாரிகளின் கெடுபிடி, லஞ்சத்தால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
பெரும்பாலான விளைபொருட்கள், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இனியும் சந்தை கட்டணத்தை தொடர்வது என்பது இரட்டை வரி விதிப்பு முறையே. தமிழகத்தில் 2023-24ன் மொத்த ஜி.எஸ்.டி., வரிவசூல் ரூ.ஒரு லட்சத்து 21ஆயிரத்து 329 கோடி. இது முந்தைய ஆண்டைவிட ரூ.17ஆயிரம் கோடி அதிகம். ஆண்டுக்கு ரூ.150 கோடியளவே வசூலாகும் சந்தைக்கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.