sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் புத்தக கண்காட்சி நாளை நிறைவு; இன்றே தமுக்கம் வாருங்கள்... புத்தகங்களை அள்ளி செல்லுங்கள்

/

மதுரையில் புத்தக கண்காட்சி நாளை நிறைவு; இன்றே தமுக்கம் வாருங்கள்... புத்தகங்களை அள்ளி செல்லுங்கள்

மதுரையில் புத்தக கண்காட்சி நாளை நிறைவு; இன்றே தமுக்கம் வாருங்கள்... புத்தகங்களை அள்ளி செல்லுங்கள்

மதுரையில் புத்தக கண்காட்சி நாளை நிறைவு; இன்றே தமுக்கம் வாருங்கள்... புத்தகங்களை அள்ளி செல்லுங்கள்


ADDED : செப் 15, 2024 01:02 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவனம் ஈர்த்த சில புத்தகங்கள்

* ஸ்ரீ ரமண பாகவதம் பாகம் - 2


'ரமண சாகரம்' என்னும் இனிப்பு கடலில் இருந்து ஒரு சில பகுதிகளை எடுத்து இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ரமணரைப் பல்வேறு காலகட்டங்களில் நாடி வந்த பக்தர்களையும், அவர்களது அனுபவங்களையும் விவரிப்பதுடன் பகவானின் வாழ்க்கையையும் அவரது உபதேசத்தையும் விளக்கியுரைக்கிறது இப்புத்தகம். முதல் பாகத்தின் வரவேற்பை தொடர்ந்து ஆன்ம தாகத்தை மேலும் மேலும் பருகும் ஆர்வத்தை, ரமணரை முழுமையாக அறியும் விருப்பம் உள்ளவர்களுக்கு இப்புத்தகம் உதவுகிறது.

ஆசிரியர் : பா.சு.ரமணன்

வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

விலை : ரூ. 340

* தலவிருட்சங்கள்


ஒவ்வொரு மரமும் தன் இலை, காய், கனி, பட்டை என தன் ஒவ்வொரு அங்கத்தையும் மனித சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பது பற்றி விளக்கிச் சொல்கிறது இந்நுால். இதனால் நம் கோயில்களில், எருக்குச் செடியிலிருந்து அரசமரம் வரை மரங்களை நட்டு அவற்றைத் தல விருட்சம் என்ற பெயரில் தெய்வமாகவே வணங்குகின்றனர். சென்னை மருந்தீஸ்வரர் கோயிலில் உள்ள வன்னிமரம், கொல்லிமலை அறப்பலீஸ்வரர் கோயிலில் உள்ள வில்வம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் உள்ள மருதமரம் என பல ஊர்களில் தலவிருட்சங்கள் தோன்றிய சுவாரசியமான வரலாறு, அவற்றின் மருத்துவ குணங்கள், அவை நீக்கும் நோய்கள் பற்றி விரிவாக ஆராய்கிறது இந்த தல விருட்சம்.

ஆசிரியர் : டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை : ரூ. 250

* பொன்னியின் செல்வன்


விவாதங்கள்

பொன்னியின் செல்வன் நாவல் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக வெளியானதையொட்டி இணையதளத்தில் ஒரு பெரும் கூட்டுவிவாதம் நடந்தது. பொதுவாக ஒரு திரைப்படம் வரும்போது கவன ஈர்ப்புக்கு எல்லா தரப்பும் அதைச்சார்ந்து பேசுவார்கள். அதில் பலமுனைகளில் கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் ஐயங்களும் முன்வைக்கப்பட்டன. பொன்னியின் செல்வன் படத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அந்த விவாதங்களை ஒட்டி எழுதிய கட்டுரைகளும் பதில்களும் இந்நுாலில் உள்ளன. சோழர்கள் பற்றியும் தமிழ் வரலாறு பற்றியும் ஒட்டுமொத்தமாக ஒரே புத்தகத்தில் வாசிக்க முடிகிறது.

ஆசிரியர் : ஜெயமோகன்

வெளியீடு : விஷ்ணுபுரம் பதிப்பகம்

விலை : ரூ. 270

* நோய் தீர்க்கும் டயட் பிளான்


மனித வளர்ச்சியில் முக்கியமான பருவங்களுக்கும், முக்கியமான நோய்களுக்கும் எந்த வழிகளில் எல்லாம் சரியான விதத்தில் உணவுகள் உதவும் என்பதை அறிவியல் பூர்வமாக எளிய தமிழில் இந்நுால் எடுத்துரைக்கிறது. தேவையான உணவு மட்டுமில்லாமல் தண்ணீரின் அவசியம், உடற்பயிற்சிகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றியும் இப்புத்தகம் விரிவாக சொல்கிறது. பல், எலும்பு, கேசம் என உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுகிற உணவுகள் தொடர்பாக இந்நுாலில் ஆசிரியர் எழுதியுள்ளார்.

ஆசிரியர் : டாக்டர் கு.கணேசன்

வெளியீடு : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

விலை : ரூ. 300

* தி பேமஸ் பை


குழந்தைகளின் கதைகளாக மட்டுமில்லாமல் வாழ்க்கையில் தைரியமாகவும், அன்பாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழக வேண்டும் என்பதை முன்வைப்பதால் குழந்தைகள் வளரும் போதே நற்குணங்களுடன் வளரும் சூழலை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகள் பெரிதும் விரும்பி வாசிக்க கூடிய புத்தகமாக திகழ்கிறது.

ஆசிரியர் : எனிட் பிளைட்டன்

வெளியீடு : ஹாச்சேட் யு.கே.

விலை : ரூ. 250

/////////////////






      Dinamalar
      Follow us