ADDED : செப் 18, 2024 02:02 AM

அ நிறம் | அளவு
மதுரை : மதுரையில் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆசிரியைகள் பலியான சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த வார்டன் புஷ்பா 56, நேற்று இறந்தார்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே கட்ராபாளையம் தெருவில் விசாகா பெண்கள் விடுதி உள்ளது. இங்கு செப்.12 அதிகாலை பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பரிமளா சவுத்ரி, தனியார் கேட்டரிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியை சரண்யா 26, இறந்தனர். விடுதி வார்டன் நாகமலைபுதுக்கோட்டை சேர்ந்த புஷ்பா, மாணவி ஜனனி காயமுற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் நேற்று புஷ்பா இறந்தார். தீ விபத்து குறித்து விடுதி உரிமையாளர் இன்பா, வார்டன் புஷ்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
