/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரியவகை நரம்பு பிரச்னையால் கை, கால் செயலிழப்பு பெண்ணை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை

ADDED : ஜூலை 25, 2024 04:48 AM
மதுரை: அரியவகை நரம்பு பிரச்னையால் கை, கால்கள் செயலிழந்த பிரசவமான இளம்பெண்ணை மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.
ஒரு லட்சம் பேரில் ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே வரும் 'குயில்லன் பார்ரே' நோய் தாக்கத்தால் அந்த பெண் பாதிக்கப்பட்டிருந்ததாக டீன் தர்மராஜ் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது பெண் கேரளாவில் கணவருடன் வசித்த நிலையில் ஜூன் 29 ல் 3வது முறையாக குழந்தை (ஆண்) பெற்றார். மறுநாளே வலிப்பு வந்ததால் நெடுங்கண்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அதன் பின் தேனி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார். அங்கு உயர் ரத்தஅழுத்தம் காரணமாக வரும் வலிப்பு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜூலை 7 ல் கை, கால்கள் செயல்படாத நிலையில் மூச்சு திணறலுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் லட்சம் பேரில் ஒருவருக்கு வரும் அரிய வகை 'குயில்லன் பார்ரே' நோய் தாக்கியது தெரியவந்தது. இந்நோய்க்கு 'ஐ.வி.ஐ.ஜி.' எனப்படும் உயர் சிகிச்சை மருந்துகள் வழங்கப்பட்டு 5 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது கை, கால்கள் செயல்பட ஆரம்பித்து குழந்தையும் தாயும் நன்றாக உள்ளனர் என்றனர். பொது மருத்துவத்துறைத் தலைவர் நடராஜன், மருத்துவ கண்காணிப்பாளர் குமாரவேல், ஆர்.எம்.ஓ. ஸ்ரீலதா, உதவி பேராசிரியர் சுரேஷ்குமார் உடனிருந்தனர்.