ADDED : மார் 25, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கல்லுாரி, இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் பல் மருத்துவ முகாம் நடந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.
டி.ஐ.ஜி., பழனி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமை கல்லுாரி சேர்மன் அருண் போத்திராஜ் ஒருங்கிணைத்தார். 36 பெண்கள் உட்பட 87 கைதிகள், 7 பணியாளர்கள் பயன்பெற்றனர். சிறையில் உள்ள தொழிற்சாலைகள், இசைப்பள்ளி, சிறை சந்தையை நீதிபதி ஆய்வு செய்தார்.

