/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி
/
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அறநிலையத்துறை ரூ.59 லட்சம் வாடகை பாக்கி
ADDED : செப் 03, 2024 06:17 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடத்தில் உள்ள மண்டல அறநிலையத்துறை அலுவலகம் ரூ.59 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மதுரை எல்லீஸ்நகரில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு அ.தி.மு.க., ஆட்சியில் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு முன் இந்த அலுவலகம் தெற்கு - மேற்கு சித்திரை வீதி சந்திப்பில் இருந்தது.
இடப்பற்றாக்குறையால் 2017 ஆக.,6 ல் காலி செய்யப்பட்டது. இதுவும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம்தான். காலி செய்யும்போது வாடகை பாக்கி ரூ.59 ஆயிரத்தை செலுத்தவில்லை. அறநிலையத்துறையின் கீழ்தான் மீனாட்சி கோயில் நிர்வாகம் இயங்குவதால் அதிகாரிகளும் அதை பற்றி கண்டுக்கொள்ளவில்லை.
இதற்கிடையே தற்போதைய மண்டல அலுவலகம் 2017 முதல் எல்லீஸ்நகரில் இயங்கி வருகிறது. இதன் வாடகை விபரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தினகரன் என்பவர் கோயில் நிர்வாகத்திடம் கேட்டார். அதற்கு பதில் அளித்துள்ள நிர்வாகம், வாடகை பாக்கியாக ரூ.59 லட்சத்து 6 ஆயிரத்து 813 அறநிலையத்துறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கூறியதாவது: கோயில் இடத்தில் கடை வைத்திருப்பவர்கள், குடியிருப்பவர்களிடம் ↔தொடர்ச்சி கடைசி பக்கம்வாடகை வசூலிப்பதில் 'கறார்' காட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள், தங்களது அலுவலகத்திற்கான வாடகையை தராமல் இழுத்தடிப்பது நியாயம்தானா. இது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இதனால் மீனாட்சி கோயிலுக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதே இடத்தை தனியாருக்கு கொடுத்திருந்தால் வாடகை முறையாக வந்திருக்கும். வாடகையையும் உயர்த்தி இருக்கலாம். ஆனால் அறநிலையத்துறை அலுவலகம் என்பதால் கோயில் நிர்வாகம் கேட்க தயங்குகிறது.
இவ்வாறு கூறினர்.