/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி பகுதி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
/
மதுரை மாநகராட்சி பகுதி வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
ADDED : செப் 05, 2024 04:10 AM
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் சட்டசபை தொகுதி வாரியான வளர்ச்சிப் பணிகள் குறித்து நேற்று அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., சக்திவேல், துணைமேயர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்கனவே மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், நகருக்குள் உள்ள சட்டசபை தொகுதிகளில் மேற்கு, மத்திய தொகுதிகளுக்கான தேவை குறித்து ஆய்வு நடந்தது.
இத்தொகுதிக்கான தேவைகள் பற்றி ஏற்கனவே கணக்கெடுத்துள்ளனர். அத்துடன் மாநகராட்சி கவுன்சிலர்களின் கருத்துக்களையும் கேட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆலோசனை நடத்தினர். கவுன்சிலர்கள் பள்ளிகளை மேம்படுத்துவது, தெருநாய்களுக்கு கருத்தடை, தெருக்களில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.