/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
மதுரையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : செப் 07, 2024 05:42 AM
மதுரை: மதுரையில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக மாநகராட்சி தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. கால்நடைத்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ரோட்டின் குறுக்கே பாய்ந்து, வாகன விபத்தை ஏற்படுத்துகின்றன. நாய்கள் கடிப்பதால் பலர் ரேபிஸ் நோய் பாதிப்பிற்குள்ளாகினர். தெரு நாய்களின் இன விருத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: தினமும் 30 முதல் 35 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. பிடிபட்ட அதே இடத்தில் மீண்டும் நாய்கள் விடப்படுகிறது. நாய்களை கொல்ல சட்டம், விதிகளில் இடமில்லை. கருத்தடை செய்ய மாநகராட்சியில் 3 கால்நடை டாக்டர்கள் உள்ளனர். ஆகஸ்ட்டில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இம்மாத இறுதியில் நிறைவடையும்.பிராணிகள் நல வாரிய பிரதிநிதி ஜெயகிருஷ்ணன்: நாய்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு கால்நடை பராமரித்துறைக்குத்தான் உள்ளது. அங்குதான் கால்நடை டாக்டர்கள் உள்ளனர். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளிடம் அப்பொறுப்பு சுமத்தப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: தமிழக கால்நடை பராமரிப்புத்துறை, பிராணிகள் நல வாரியம் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.