ADDED : ஆக 15, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை - பீஹார் வழித்தடத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக பீஹார் மாநிலம் முஸாபர்பூருக்கு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒருவழி சிறப்பு ரயிலாக (06114) ஆக., 18, இரவு 7:05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு கொடை ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக ஆக., 21, அதிகாலை 2:45 மணிக்கு முஸாபர்பூர் செல்லும். இந்த ரயிலில், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகளும், 8 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டிகளும் இணைக்கப்படும். முன்பதிவு தொடங்கியுள்ளது.