/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை டூ சென்னை இலவச விமானப் பயணம்
/
மதுரை டூ சென்னை இலவச விமானப் பயணம்
ADDED : செப் 05, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ; மதுரை யானைக்கல் எம்.ஏ.வி.எம்.எம்., மேல்நிலைப்பள்ளி சார்பில் தமிழ்வழிக்கல்வி பயிலும் ஐந்து மாணவர்கள் விமானத்தில் சென்னைக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்வழியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் இலவச விமானப் பயணம் எனும் புதிய திட்டத்தை தலைவர் பாஸ்கரன், செயலாளர் பொன்னம்பலம் அறிமுகப்படுத்தினர்.
அதன்படி பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களில் இருந்து குலுக்கல் முறையில் ஐந்து மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.
அவர்களை ஆக. 27 ல் சென்னைக்கு அழைத்துச் சென்று பிர்லா கோளரங்கம், அரசு அருங்காட்சியகம், அண்ணா நுாலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.