/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்தாண்டுகளில் அபரிமிதமாக வளரும் மதுரை: அமைச்சர் மூர்த்தி கணிப்பு
/
ஐந்தாண்டுகளில் அபரிமிதமாக வளரும் மதுரை: அமைச்சர் மூர்த்தி கணிப்பு
ஐந்தாண்டுகளில் அபரிமிதமாக வளரும் மதுரை: அமைச்சர் மூர்த்தி கணிப்பு
ஐந்தாண்டுகளில் அபரிமிதமாக வளரும் மதுரை: அமைச்சர் மூர்த்தி கணிப்பு
ADDED : ஆக 31, 2024 06:07 AM

மதுரை : 'ஐந்தாண்டுகளில் மதுரை நகரம் அபரிமிதமாக வளரும்' என மதுரை தமுக்கத்தில் 'பில்டு எக்ஸ்போ' கட்டுமான பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் மூர்த்தி பேசினார்.
அமைச்சர் பேசியதாவது: மதுரை வளராததற்கு விவசாய பகுதி அதிகமிருப்பதே காரணம் என்கின்றனர். ஒருபகுதியில் விவசாயம் குறைந்தாலும், மற்றொரு பகுதியில் வளர வாய்ப்புள்ளது. இங்கு மிகப்பெரிய தொழிலாக இருந்த கிரானைட் பத்தாண்டுகளாக முடங்கிவிட்டது. விமான நிலைய விரிவாக்கம் வந்தால் மதுரை விரைந்து வளரும். அடுத்து வாடிப்பட்டியில் இருந்து சிட்டம்பட்டி வழியாக தென்காசி ரோட்டில் ஆலம்பட்டி வரை அவுட்டர் ரிங்ரோடு வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் மதுரை நினைத்துப் பார்க்க முடியாத அளவு வளர்ச்சி பெற்றுவிடும்.
வண்டியூர் வைகை வடகரை ரோட்டை சக்குடி பாலம் வரை நீட்டிக்க இடம் கையகப்படுத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். மாட்டுத்தாவணி அருகே டிட்கோ சார்பில் ரூ.325 கோடியில் டைடல் பார்க் வர உள்ளது. கொட்டாம்பட்டி அருகே தொழில் நகரம் உருவாக உள்ளது. அதனால் விரைவில் மதுரை மிகப்பெரிய வளர்ச்சி பெற உள்ளது. மதுரையில் நிலத்தின் மதிப்பு மூன்றாண்டுகளில் 300 மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது விலையும் குறையும். பாதுகாப்பும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
180க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான பொருட்களுடன் நடைபெறும் கண்காட்சி நாளை (செப்.1) முடிவடைகிறது. தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.