sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

முக்கிய கட்சிகள் இன்று மனுத்தாக்கல்

/

முக்கிய கட்சிகள் இன்று மனுத்தாக்கல்

முக்கிய கட்சிகள் இன்று மனுத்தாக்கல்

முக்கிய கட்சிகள் இன்று மனுத்தாக்கல்


ADDED : மார் 25, 2024 05:26 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்று(மார்ச் 25) மனுத்தாக்கல் செய்கின்றனர்.

மனுத்தாக்கல் மார்ச் 19ல் துவங்கியது. இதுவரை 3 சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின் இன்று முக்கிய கட்சிகள் மனுத்தாக்கல் செய்கின்றன. இன்று மதியம் 1:16 மணி வரை பவுர்ணமி திதி உள்ளதால் இந்நேரத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன.

இன்று காலை 11:00 மணிக்கு காந்தி மியூசியம் அருகே காலை 10:30 மணிக்கு கட்சியினருடன் புறப்பட்டு பா.ஜ., வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் கலெக்டர் அலுவலகம் சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.

அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் காலை 11:30 மணிக்கு கே.கே.நகர் ஆர்ச் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு மனுத்தாக்கல் செய்கிறார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், மதியம் 1:00 மணிக்கு மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி அருகே கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக புறப்பட்டு மனுத்தாக்கல் செய்கிறார்.






      Dinamalar
      Follow us