ADDED : மே 28, 2024 03:29 AM
மதுரை, : மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
செயலாளர் கவிஞர் இரா. ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் இரா. வரதராஜன் வரவேற்றார். ஆலோசகர் ஆதிசிவம் தென்னவன், பொருளாளர் கவிஞர் இரா. கல்யாணசுந்தரம், துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். வனஜா நன்றி கூறினார்.
கவிஞர்கள் குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, அஞ்சூரியா, ஜெயராமன், புலவர் முருகபாரதி, அனுராதா, சமயக்கண்ணு, பழனி, ராமப்பாண்டியன், முனியாண்டி, சத்யா, பொன்பாண்டி உள்ளிட்டோர் கவிதை பாடினர். வரதராஜன் எழுதிய சரித்திர நாயகர்கள் கவிதை நுால் வெளியிடப்பட்டது. நிறுவனர் வீரபாண்டிய தென்னவன் சார்பில் விருது வழங்கப்பட்டது.
வித்யா பாரதி, த.மு.எ.க.ச., செயலாளர் பாலசுப்பிரமணியன், நடராஜன், தேவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவியரங்கத்திற்கு இடம் தந்து உதவிய மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.