/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எங்க இடத்திலேயே பாலை அளங்க; பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி; மீண்டும் முன்னுரிமை வழங்குமா ஆவின்
/
எங்க இடத்திலேயே பாலை அளங்க; பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி; மீண்டும் முன்னுரிமை வழங்குமா ஆவின்
எங்க இடத்திலேயே பாலை அளங்க; பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி; மீண்டும் முன்னுரிமை வழங்குமா ஆவின்
எங்க இடத்திலேயே பாலை அளங்க; பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி; மீண்டும் முன்னுரிமை வழங்குமா ஆவின்
ADDED : ஜூலை 01, 2024 05:29 AM
மதுரை : மதுரை ஆவினுக்கு பால் சேகரிக்கும் பி.எம்.சி.,களிலேயே (மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்கள்) பால் தரம், அளவு சோதிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என பால் உற்பத்தியாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
ஆவினுக்கு கட்டுப்பாட்டில் 900க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சொசைட்டிகள் உள்ளன. அங்கு சேகரிக்கும் பாலை மதுரையில் உள்ள மெயின் அலுவலகத்திற்கு கொண்டு வருவதற்குள் பால் கெட்டுப்போவது உள்ளிட்ட சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால், உற்பத்தியாளர்கள் வசிக்கும் பகுதியிலேயே 50 பி.எம்.சி.,கள் ஏற்படுத்தப்பட்டன.
அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட பி.எம்.சி.,களில் விவசாயிகள் பாலை வழங்கியபின், அங்கிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சேகரித்து மெயின் அலுவலகத்திற்கு பால் கொண்டு வரப்பட்டது. இதுபோல் தினமும் 20 டேங்கர்கள் மூலம் 1.70 லட்சம் லிட்டர் பால் மெயின் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நடைமுறையில் பி.எம்.சி., களிலேயே பாலின் தரம், அளவு ஆகியவற்றை மெயின் அலுவலக தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் சென்று சோதித்து பாலுக்கான விலையை நிர்ணயித்து (ஸ்பாட் அக்னாலெட்ஜ்மென்ட்) வந்தனர். இதனால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைத்தது.
இந்த நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி 'ஸ்பாட் அக்னாலெட்ஜ்மென்ட்' முறை முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. இதனால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: மெயின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பாலின் தரம், அளவு சோதனையில் பல குளறுபடிகள் நீடித்தது. பால் கொழுப்பு அளவில் ஏற்படும் மாற்றத்தால் பால் நிர்ணய விலையில் பாதிப்பு ஏற்பட்டது. பல ஆண்டுகள் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. தற்போதுள்ள பொது மேலாளர் சிவகாமி பொறுப்பேற்ற பின்பே பி.எம்.சி.,களில் 'ஸ்பாட் அக்னாலெட்ஜ்மென்ட்' நடைமுறையை கொண்டு வந்தார்.
உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் அவருக்கு நற்பெயர் ஏற்பட்டது. தற்போது ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டு விட்டது. பொது மேலாளர் 'ஸ்பாட் அக்னாலெட்ஜ்மென்டு' க்கு முன்னுரிமை அளித்து அந்த முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றனர்.