நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : வேடர் புளியங்குளத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் கண்ணன் துவக்கி வைத்தார். ஊராட்சி செயலாளர் வேல்முருகன், சுகாதார மேற்பார்வையாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.