ADDED : ஆக 01, 2024 05:10 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பாப்பாபட்டியில் இப்பகுதி மக்களின் குலதெய்வக் கோயிலான ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. அம்மனின் வழிபாடுக்குரிய பூஜை பொருட்கள் அடங்கிய 5 பெட்டிகள் உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் உள்ளது.
ஆண்டு தோறும் மகாசிவராத்திரி தினத்தில் 5 பெட்டிகளையும் எடுத்துச்சென்று வழிபாடு நடத்துவர். ஆடிமாதத்தில் நடுஆடி, மற்றும் கார்த்திகை மாத முதல் தேதிக்கு சின்னப்பெட்டியில் உள்ள பூஜை பொருட்களை மட்டும் எடுத்துச் சென்று வழிபாடு நடைபெறும்.
நடு ஆடி வழிபாட்டுக்காக சின்னப்பெட்டி எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பூஜாரிகள், கோடாங்கிகள், திரளான பக்தர்கள் நேற்று காலை 10:00 மணிக்கு சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து சின்னப்பெட்டியை எடுத்து நடைபயணமாக பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.