ADDED : மே 20, 2024 06:37 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா கிழவனேரி, அச்சம்பட்டி கிராம பொதுமக்கள் சார்பாக போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மினி மாரத்தான் போட்டி நடந்தது.
ஊராட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். அச்சம்பட்டியில் இருந்து கிழவனேரி வரை 3 கி.மீ.,க்கு நடந்த இந்த போட்டியில் மதுரை கார்த்திகேயன் முதல் பரிசும், மேலக்கோட்டை செந்தில்குமார் 2ம் பரிசு, மதுரை ரெஜினால்ட் 3ம் பரிசு பெற்றனர். ஏற்பாட்டை கணேஷ் குமார், யுவராஜா செய்திருந்தனர்.
