/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மத்திய அரசு தமிழக அரசை ஓரவஞ்சனையோடு ஒதுக்குகிறது அமைச்சர் உதயநிதி பேச்சு
/
மத்திய அரசு தமிழக அரசை ஓரவஞ்சனையோடு ஒதுக்குகிறது அமைச்சர் உதயநிதி பேச்சு
மத்திய அரசு தமிழக அரசை ஓரவஞ்சனையோடு ஒதுக்குகிறது அமைச்சர் உதயநிதி பேச்சு
மத்திய அரசு தமிழக அரசை ஓரவஞ்சனையோடு ஒதுக்குகிறது அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : மார் 25, 2024 05:32 AM

மதுரை : மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தை ஓரவஞ்சனையோடு ஒதுக்கி வைத்துள்ளது'' என மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசினார்.
மதுரை ஊமச்சிக்குளம், கே.புதுார் பகுதியில் வேனில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரே ஒரு செங்கலை வைத்தனர். அதையும் நான் எடுத்துச் சென்றுவிட்டேன்.
மதுரைக்கு பின்பு பிறமாநிலங்களில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைகள் எல்லாம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால் தமிழகத்தை மத்திய பா.ஜ., அரசு ஓரவஞ்சனையோடு ஒதுக்கி வருகிறது. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்கென ஒருரூபாய் கூட செலவிடவில்லை.
ஆனால் சமஸ்கிருதத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.6.5 லட்சம் கோடி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு ரூபாயில் 28 காசுகளையே திருப்பி தருகின்றனர். எனவே மோடிக்கு மிஸ்டர் 28 பைசா என பெயர் வைக்கலாமா.
தற்போது அவர்கள் புதிய கல்வி திட்டத்தை செயல்படுத்த நினைக்கின்றனர். இத்திட்டத்தை அமல்படுத்தினால் ஐந்து, எட்டாம் வகுப்புகளில்கூட பொதுத் தேர்வு எழுதும் நிலை வரும்.
சிலிண்டர் விலையை தேர்தல் நேரம் என்பதால் ரூ.100 குறைத்துள்ளனர். தேர்தல் முடிந்துவிட்டால் ரூ.500 அதிகரிப்பார்கள். இதனால்தான் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று தெரிவித்துள்ளோம், என்றார்.

