நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம், உசிலம்பட்டி சட்டசபை தொகுதிகளில் விருதுநகர் லோக்சபா தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி மார்ச் 23 ல் பிரசாரம் செய்ய உள்ளார்.
இடம் தேர்வு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் திருமங்கலம் தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆலோசனை செய்தனர்.

