ADDED : ஜூலை 26, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம் : வாடிப்பட்டி ஒன்றியம் வடகாடுபட்டி வனப்பகுதியில் ரோடு அமைக்கும் பணிகள் குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாவட்ட வன அலுவலர் தருண் குமார், சோழவந்தான் வனச்சரகர் வெங்கடேஸ்வரன் உடன் இருந்தனர். அமைச்சரிடம் 150 மீ., ரோடு வசதிகேட்டு மக்கள் கோரிக்கை வைத்தனர்.
2018 கஜா புயலால் பாதிக்கப்பட்ட குட்லாடம்பட்டி அருவி பணிகள், வைகாசிப்பட்டி ரோடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் விரைவில் பணிகளை துவங்க உத்தரவிட்டார்.