ADDED : மே 26, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் பகுதி மக்களுக்கு சில தினங்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று தும்பைப் பட்டி வந்த அமைச்சரிடம் கக்கன் மணிமண்டபத்தை பழுது நீக்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வேப்படப்பில் தீக்கிரையான வீட்டு உரிமையாளர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். தாசில்தார் முத்துப்பாண்டி, வழக்கறிஞர் துரைப்பாண்டி கலந்து கொண்டனர்.
