நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வலைச்சேரி பட்டி சமூக ஆர்வலர் சரவணன்.இவர் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு மேலுார் பகுதியில் பதாகைகளை ஏந்தியவாறு நுாதன விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளி, கல்லுாரி முன்பு நம்முடைய பண்பாடு கலாசார நாகரிகத்தை பாதுகாத்து, தனிமனித ஒழுக்கம், மனக்கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்.
மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றி நம் பாரம்பரியமான கலாசாரத்தை சிதைத்து, வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை சீரழிக்க கூடாது என பிரசாரம் செய்தார். இவர் 18 ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

