ADDED : ஜூன் 22, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மதுரை அவனியாபுரம் வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோயில் 37ம் ஆண்டு விழா நடந்தது.
சுவாமிக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வேண்டிக்கொண்ட கிடாய்களுடன் பொங்கல் பானை ஊர்வலம் நடந்தது. இரவு சிறப்பு பூஜை முடிந்து 480 கிடாய்கள் வெட்டி, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விடிய விடிய அன்னதானம் வழங்கப்பட்டது.