/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதையில் தகராறு செய்த மகனை கொன்ற தாய் கைது
/
போதையில் தகராறு செய்த மகனை கொன்ற தாய் கைது
ADDED : மே 06, 2024 06:13 AM

திருமங்கலம் : திருமங்கலம் அருகே போதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சிவசாமி 35. இவரது தாய் பாண்டியம்மாள் 48. சில ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்துவிட்டார். சிவசாமியின் தங்கை சிவரஞ்சனி திருமணமாகி பெங்களூரில் வசித்து வந்தார்.
இவருக்கு ஆறு வயதில் மன வளர்ச்சி குன்றிய மகன் உள்ளிட்ட 3 குழந்தைகள் உள்ளனர். தனது குழந்தையின் காதணி விழாவுக்கு பத்திரிக்கை தருவதற்காக ஊருக்கு வந்திருந்தார்.
கூலித் தொழிலாளியான சிவசாமி குடிபோதைக்கு அடிமையாகி தாய் பாண்டியம்மாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன் தினமும் போதை அதிகமான நிலையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தையை அடித்து துன்புறுத்தினார். இதைத் தட்டிக் கேட்ட பாண்டியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். பாண்டியம்மாள் கட்டையால் சிவசாமியை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து பலியானார். சிந்துபட்டி போலீசார் பாண்டியம்மாளை கைது செய்தனர்.