ADDED : மே 18, 2026 09:43 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச அருங்காட்சியக தின விழா கொண்டாடப்பட்டது.
பொருளாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ், மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி வரலாற்றுத் துறை தலைவர் சத்தியபாமா முன்னிலை வகித்தனர். மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி துணை முதல்வர் கபிலன் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி இளங்கலை வரலாறு மாணவிகளுக்கு படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா நடந்தது. மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் நன்றி கூறினார்.
