/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் விருது
/
இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் விருது
ADDED : ஜூலை 06, 2024 06:13 AM
மதுரை : வேளாண் துறை சார்பில் தொடர்ந்து மூன்றாண்டுகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் 3 ஆண்டுகள் இயற்கை விவசாயம் செய்வதுடன் அதற்கான இயற்கை விவசாய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நிலத்தின் மண்ணில் உயிர்ம கரிமச் சத்து அளவு 1.5 சதவீதத்திற்கும் அதிகமாகவும் செலவு ஆதாய விகிதம் குறைந்தபட்சம் 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யலாம். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் விதைகள், எரு உற்பத்தி, இயற்கை இடுபொருள் உற்பத்தியில் சுயசார்புடன் இருக்க வேண்டும். பாரம்பரிய விதைகளை பயன்படுத்த வேண்டும்.
விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் செப்.,15க்குள் விண்ணப்பிக்கலாம். வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் பதிவுக் கட்டணம் ரூ.100 வரவு வைக்க வேண்டும்.
அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்தார்.