/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பா.ஜ., சார்பில் தேசிய கைத்தறி தினவிழா
/
பா.ஜ., சார்பில் தேசிய கைத்தறி தினவிழா
ADDED : ஆக 08, 2024 04:53 AM
மதுரை: மதுரையில் பா.ஜ., நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழா நடந்தது.
நகர் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை பொது செயலாளர் விஷ்ணுபிரசாத், நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன், மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர் கருடகிருஷ்ணன், ஊடகப்பிரிவு தலைவர் வேல்பாண்டியன் பங்கேற்றனர்.
தேசிய செய்தி தொடர்பாளர் அபர்ஜித்தா சாரங்கி எம்.பி., பேசியதாவது: நான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்படும் முன், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஒடிசா மாநில கைத்தறி துறையில் பணியாற்றினேன். நெசவாளர்கள் பிரச்னைகளை அறிவேன். மதுரையில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். நம் நாடு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாடுதான். எல்லா மாநிலங்களிலும் நெசவாளர்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்னைதான் உள்ளது. அவர்கள் சிறப்பாக பணியாற்ற தொழில்நுட்ப உதவி, மூலப்பொருட்கள், நல்ல சந்தை வாய்ப்புகளும் தேவை. இவை கிடைத்தால் நெசவுத் தொழில் மேம்படும். அதற்கு பட்ஜெட்டில் வாய்ப்பு உள்ளது, என்றார்.