ADDED : ஜூலை 22, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி, இந்திய பழ சங்கம் சார்பில் தேசிய மா தின விழா நடந்தது.
தோட்டக்கலைத் துறைத் தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்றார். டீன் சந்திரமணி தலைமை வகித்தார். மா அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, அதை மேம்படுத்தும் முறை குறித்து மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி டீன் காஞ்சனா விளக்கினார். இயற்கை முறையில் மா சாகுபடி குறித்து பேராசிரியர் செந்தில்வேல் விளக்கினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் தாமரைச்செல்வி மா உற்பத்தி, அரசு திட்டங்கள் குறித்து பேசினார். இணைப்பேராசிரியர் ரவீந்திரன் ஒருங்கிணைத்தார்.
