ADDED : ஆக 30, 2024 06:09 AM
திருப்பரங்குன்றம், : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி கணினித்துறை, சார்லஸ் பாபேஜ் அசோசியேஷன் சார்பில் 'ஓப்பன் சோர்ஸ் டூல்ஸ் பார் எண்ட் டு எண்ட் டெவலப்பர்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். கணினி துறைத்தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.
அமெரிக்கா இன்ஜினியரிங் குவாலிட்டி லிஜியன் டெக்னாலஜிஸ் இயக்குனர் முத்துராமன் வெங்கடராமன், கணினித் துறையில் சிறப்பாக வெற்றிகரமாக பணியாற்ற மாணவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும், வலைதளத்தில் தேடல்கள் குறித்து பேசினார்.
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லுாரி, மதுரை என்.எம்.ஆர்., கல்லூரி, திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர்கள் சிராஜுதின், பாலாஜி, கோமதி, அனுராதா, பேராசிரியர்கள் ஜெயந்தி, கவிதா, கணேஷ், ஞானேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் ஜெயந்தி ஒருங்கிணைத்தார்.
