ADDED : செப் 01, 2024 03:28 AM

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் தேசிய விளையாட்டு விழா நடந்தது. மாணவர்களுக்கு மேஜை பந்து, இறகு பந்து, சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்கள்
இறகுபந்து மகளிர் பிரிவில் தாவரவியல் 2ம் ஆண்டு மாணவி கிரண்யா முதலிடம், வேதியியல் முதலாமாண்டு மாணவி லோகதர்ஷினி 2ம் இடம், ஆடவர் பிரிவில் முதுநிலை கணிதவியல் 2ம் ஆண்டு மாணவர் ஹரிஹரன் முதலிடம், வணிக நிர்வாகம் 3ம் ஆண்டு மாணவர் அப்சர் இமாம் 2ம் இடம் வென்றனர்.
சதுரங்கத்தில் முதுகலை பொருளியல் 2ம் ஆண்டு மாணவி சத்யா முதலிடம், வேதியியல் 3ம் ஆண்டு மாணவி கவுசிக் மாரி 2ம் இடம் வென்றனர். மேஜை பந்தில் வணிகவியல் முதலாமாண்டு மாணவர் ஆனந்த விக்னேஷ் முதலிடம், வணிக நிர்வாகம் முதலாமாண்டு மாணவர் திருமுருகன் 2ம் இடம் வென்றனர்.
பரிசளிப்பு விழாவில் முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். மாணவி ஜனனிஸ்ரீ வரவேற்றார். ரியோ மருத்துவமனை பிஸியோதெரபிஸ்ட் சங்கீதா வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினார். மருத்துவமனை மேலாளர் நாகராஜ், பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர் செல்வம் தொகுத்து வழங்கினார். மாணவர் நந்தகோபால் நன்றி கூறினார். போட்டி ஏற்படுகளை உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் செய்தார்.