ADDED : ஜூலை 25, 2024 04:49 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில்வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் விவசாய பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாகவிளை நிலத்தில் இயற்கை உரம் சேர்க்கும் வகையில் பயிரிடப்பட்ட தக்கை பூண்டு, சணப்பு செடிகளை விவசாயிகள் கிணற்று பாசனத்தில் ஒரு மாதத்திற்கு முன்னதாக பயிர் செய்தனர்.
தற்போது உழவு செய்யும் நிலைக்கு செடிகள் வளர்ந்து உள்ளன. பூக்கும்நேரத்தில் செடிகளை அப்படியே மண்ணுக்குள்அழுத்தி டிராக்டரால் உழவு செய்கின்றனர். செடிகள் மண்ணில் புதைந்து மட்கி, பயிருக்கு சத்தாக மாறுகிறது. ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மண்ணிற்கு இயற்கை உரமாக மாறும் செடிகளால் மகசூல் அதிகரிக்கும்.
வயலில் தொடர்ந்து ரசாயன உரங்களுடன் பயிர் செய்வதால் மண்வளம் குறைகிறது. இதனால்இயற்கை உரத்திற்காக செடிகளை பயிரிட்டு உழவு பணியில் ஈடுபட்டுஉள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
